பெண்கள் நலனுக்காக 'பாஜக'வில் இணைய தயாரான தாடி பாலாஜியின் மனைவி 'நித்தியா'.

காமெடி நடிகராக அறியப்படும் தாடிபாலாஜி, பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளராகவும், காமெடி நிகழ்ச்சி நடுவராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை கரணமாக தனது மனைவி நித்தியாவை இவர் விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து நித்தியா தனது மகள் போஷிகாவுடன் மாதாவரம் பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் நித்யாவின் எதிர்வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் தனது காரை நித்யா சேதப்படுத்தியுள்ளதாகக் கூறி காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மாதாவரம் போலீசார் நித்யாவை கைது செய்தனர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நித்தியா கூறியதாவது:” தனியாக வாழும் பெண்கள் மீது நிறைய கேள்விகள் அடுக்கப்படுகிறது. ஏன் நாங்கள் எல்லாம் நேர்மையான வழியில் சம்பாதிக்க மாட்டோமா? நான் தனிப்பட்ட முறையில் பல துன்பங்களை கடந்து வந்துள்ளேன், இனி வரும் பெண்கள் இதனை சந்திக்க கூடாது, அதைதான் நான் விரும்புகிறேன், இப்படி ஆசைப்பட்டு சாதித்தவர்கள் வரிசையில் தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறார். அவர் எனக்கு மிக பெரிய இன்ஸ்பிரேஷன். அதனால் பெண்கள் மேம்பட மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாஜகவில் இணையவுள்ளேன்" என நித்தியா தெரிவித்துள்ளார்.