‘வேட்டையன்’- தலைவர்170 பட டைட்டில் ரிவீல்.

photo

சூப்பர் ஸ்டார் பிறாந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

photo

நெல்சனுடன் கூட்டணி அமைத்து ‘ஜெயிலர்’ எனும் மாஸ் ஹிட் படத்தை கொடுத்த சூப்பர் ஸ்டார் தற்போது த.செ. ஞானவேல்ராஜா இயக்கத்தில் அவரது 170 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு கேரளா, திருச்சி, சென்னை, திருநெல்வேலி, மும்பை உள்ளிட்ட இடங்களில்  கோலாகலமாக நடந்த  நிலையில் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

படத்திர்கு ‘வேட்டையன்’ என பெயரிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து டைட்டில் பக்கா மாஸ்ஸாக இருப்பதாக தலைவரின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். படத்தின் டைட்டில் இதுதான் என சில பல தகவல்கள் கடந்த 4 மாதத்திற்கு முன்பே கசிந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story