‘தலைவர் 170’ பட டைட்டில் இதுவா!- இணையத்தில் கசிந்த தகவல்.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். படம் ரசிகர்கள் மத்தியில் அதிரி புதிரி ஹிட்டானதை தொடர்ந்து தலைவரின்  அடுத்த படமான 170வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் இணையத்தில் கசிந்துள்ளது.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படத்தை ‘ஜெய்பீம்’ படத்தின் மூலம் கவன் ஈர்த்த ஞானவேல் ராஜா இயக்க உள்ளார். ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்து ரஜினி ஆன்மீக சுற்று பயணம் சென்றிருந்த நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டத்தில் தயாராகும் இப்படத்தின் தலைப்பு இணையத்தில் கசிந்து வைரலாக பரவி வருகிறது. அதாவது இந்த படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயரிட்டுள்ளார்கலாம்.

photo

படத்தின் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். தொடர்ந்து ரவுடிகளை வேட்டையாடுவதால் இந்த பெயர் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ஜெயிலர் படத்தை போல பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்க உள்ளார்.

Share this story