மல்டி ஸ்டார் படமாக தயாராகும் 'தலைவர் 170'- அமிதாப் பச்சன் முதல் மஞ்சுவாரியர் வரை.

photo

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படம் வெளியாக இன்னும் 6 நாட்களே உள்ளது. அனைவரும் ஜெயிலர் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் சமயத்தில் தலைவரின் அடுத்த படம் குறித்த தகவல்களும் கசிந்துள்ளது.

photo

அதாவது தலைவர் 170 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க,  தசெ ஞானவேல் இயக்க உள்ளார். அனிரூத் இசையமைக்கும்  இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப்பச்சன் மற்றும்  தெலுங்கு நடிகரான நானி நடிக்கபோவதாக  தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது கூடுதல் தகவலாக மலையாள நடிகர் ஃபகத் பாசில் மற்றும் நடிகை மஞ்சு வாரியரும் நடிக்க போகிறார்களாம். ஆகமொத்தத்தில் தலைவர் 170 ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ளது. ஜெயிலர் வெளியீட்டிற்கு பின்னர் தலைவர் 170 குறித்த பெயர் அறிவிப்பு,  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story