‘தலைவர் 170’ படம் – லைக்கா வெளியிட்ட தரமான அப்டேட்.

photo

சூப்பர் ஸ்டார் ‘ஜெயிலர்’ படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து  அடுத்து அவரது 170வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படதயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.

photo

லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய டி.ஜெ ஞானவேல் இயக்க உள்ள படம் ‘தலைவர்170’ இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். போலியான என்கவுண்டருக்கு எதிராக போராடும் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. மேலும் படத்தின் ஷூட்டிங் இம்மாதம் துவங்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த மாத துவங்க இருப்பதாக தெரிகிறது.

அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ஃபகத் பாசில், உள்ளிட்டோர் இணைந்துள்ள ‘தலைவர் 170’ படத்தின் சூட்டிங் முதற்கட்டமாக திருவனந்தபுரத்தில் வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி  துவங்க உள்ளதாம், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனது எக்ஸ் பக்கத்தில் “தலைவர் 170 படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும்” என குறிப்பிட்டுள்ளனர்.

Share this story