சூப்பர் ஸ்டாருடன் இணைந்த லோகேஷ் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

photo

சூப்பர் ஸடார் ரஜினிகாந்தின் 171வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

photo

குறுகிய காலத்திலேயே கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி,மாஸ்டர், விக்ரம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் தற்போது விஜய் மற்றும் திரிஷாவை வைத்து ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். விரைவில் படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் லோகேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கப்போவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தலைவரின் அதிரடி ஆக்ஷனில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஜெயிலர்’. அடுத்ததாக அவரது 170வது படத்தை த.செ. ஞானவேல் இயக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், தலைவரின் 171வது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்க உள்ள அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அன்பறிவ் பிரதர்ஸ் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்ற உள்ளனர்.

 

Share this story