‘தலைவர் 171’ அப்டேட் கொடுத்த ‘லோகேஷ்’- தரமான சம்பவம் இருக்கு.

photo

ஜெயிலர் படத்தின் மூலமாக தரமான சம்பவத்தை பதிவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தற்போது அவரது 170வது படத்திற்காக டி.ஜெ. ஞானவேலுடன் கைகோர்த்துள்ளார். தொடர்ந்து அவரது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ‘தலைவரின் 171’வது படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் லோகேஷ்.

photo

அதில் அவர் கூறியதாவது” படத்தின் கதையை சூப்பர் ஸ்டாரிடன் கூறியபோது ‘கலக்கிட்ட கண்ணா’ என கூறி என்னை கட்டி அனைத்துக்கொண்டார். அந்த இடத்தில் அனிருத்தும் இருந்தார்.’ என கூறியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் பற்றி நிறைய சர்ப்ரைஸ் உள்ளது. படத்தின் பணிகள் துவங்கியதும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். தலைவர் 171 படபணிகள் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தலைவர் படத்துக்காக முதல்முறையாக மலையாள திரைக்கதை எழுத்தாளர்களுடன் சேர்ந்து லோகேஷ் பணியாற்ற உள்ளாராம்.

Share this story