பக்கா பிளான் ரெடி…..- வெளியான ‘தலைவர் 170’ ஷூட்டிங் அப்டேட்.

photo

சூப்பர் ஸ்டார் ‘ஜெயிலர்’ படத்தின் மாஸ் வெற்றிக்கு பிறகு அடுத்து அவரது 170வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய டி.ஜெ ஞானவேல் இயக்க உள்ள படம் ‘தலைவர்170’ இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். போலியா என்கவுண்டருக்கு எதிராக போராடும் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. மேலும் படத்தின் ஷூட்டிங் இம்மாதம் துவங்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த மாத துவங்க இருப்பதாக தெரிகிறது.

photo

அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ஃபகத் பாசில், உள்ளிட்டோர் இணைந்துள்ள ‘தலைவர் 170’ படத்தின் சூட்டிங் முதற்கட்டமாக திருவனந்தபுரத்தில் துவங்க உள்ளதாம், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தொடர்ந்து நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் ரஜினிகாந்த் படத்தில் கன்னியாகுமரி ஸ்டாங்கில் பேச உள்ளாராம்.

Share this story