தலைவெட்டியான் பாளையம் - புது தமிழ் ஓடிடி வெப்தொடர் டிரைலர் ரிலீஸ்

thalai vetiyan palayam

2020 ஆம் ஆண்டு தி வைரல் ஃபீவர் தயாரிப்பில் ஜிதேந்திர குமார் , ரகுபிர் யாதவ், நீனா குப்தா மற்றும் பலர் நடித்து அமேசான் பிரைமில் வெளியானது இந்தி வெப்தொடரான பஞ்சாயத். இந்த வெப் தொடருக்கு பல ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்பொழுது வரை 4 சீசன் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இத்தொடரை தற்பொழுது தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இதில் அபிஷேக் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சேத்தன் மற்றும் தேவதர்ஷினி நடித்துள்ளனர்.

தமிழில் தலைவெட்டியான் பாளையம் என தலைப்பிட்டுள்ளனர். இத்தொடர் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இத்தொடர் 8 எபிசோட்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது. நகர்புற இளைஞன் அரசாங்க வேலைக்காக ஒரு கிராமத்தில் பணியமர்த்த படுகிறான். அங்கு அவன் படும் கஷ்டம் மற்றும் சமூக சிக்கல்களை குறித்து இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொடரை பாலகுமரன் முருகேசன் எழுத்தில் நாகா இயக்கியுள்ளார்.

Share this story