கருணாநிதியின் திரை வாழ்க்கையை படமாக்கும் தலைவி பட இயக்குநர்

கருணாநிதியின் திரை வாழ்க்கையை படமாக்கும் தலைவி பட இயக்குநர் 

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவைத் தமிழ்த் திரையுலகம் சார்பிலும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரமாண்ட விழா அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது. 

இந்நிலையில், கருணாநிதியின் திரை வாழ்க்கை பற்றிய முழு ஆணவப் படத்தை இயக்குநர் விஜய் இயக்க இருக்கிறார். அதற்கான பணிகளில் அவர் இப்போது ஈடுபட்டுள்ளார். இந்த ஆவணப்படம் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது. இவர் ஜெயலலிதாவின் ‘தலைவி’உள்பட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ஆவார். 
 

Share this story