லோகேஷ் யூனிவர்ஸில் இருக்கேனா ? - கன்ஃபார்ம் செய்த பகத் பாசில் !

thalapathy 67

லோகேஷ் யூனிவர்ஸில் தான் இருக்கிறேனா என்பது குறித்து நடிகர் பகத் பாசில் விளக்கம் அளித்துள்ளார். 

 கமலின் 'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் யுனிவர்சலில் உருவாகும் திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 'தளபதி 67' திரைப்படம் இருக்குமா என  ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்ற வருகிறது. 

thalapathy 67

இதற்கிடையே 'விக்ரம்' படத்தில் பகத் பாசில் நடித்திருந்த அமர் கதாபாத்திரம் மிக முக்கிய இருந்தது. இந்நிலையில் பட ப்ரமோஷன் ஒன்றில் நேற்று கலந்துக்கொண்ட நடிகர் பகத் பாசிலிடம் 'தளபதி 67' படத்தில் நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'தளபதி 67' படம் லோகேஷ் யூனிவர்சில் உருவானால் நிச்சயம் என்னுடைய கதாபாத்திரம் இருக்கும் என்று கூறியுள்ளார். இது 'தளபதி 67' - ல் பகத் பாசில் நடிப்பதை உறுதி செய்திருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

thalapathy 67

அதேபோன்று அமர் கதாபாத்திரத்தை வைத்து மட்டுமே ஒரு திரைப்படம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுவும் ரசிகர்களுக்கு உற்சாகும் கொடுக்கும் செய்தியாக உள்ளது. 'தளபதி 67' பகத் பாசில் நடிக்கிறார் என்றால் விஜய் சேதுபதியும் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் திரிஷா, சஞ்சத் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story