எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தளபதி 67'.. இன்று காத்திருக்கும் சம்பவம் !

thalapathy 67

விஜய்யின் 'தளபதி 67' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

'தளபதி 67' படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். மாஸ்டர் படத்தின் மூலமே விஜய்யை வைத்து பெரிய சம்பவம் செய்திருந்தார் வோகேஷ். இதையடுத்து 'விக்ரம்' படத்தில் லோகேஷ் யூனிவர்ஸிலை உருவாக்கியிருந்தார். 

thalapathy 67

அதனால் 'தளபதி 67' படமும் அதே பாணியில் தான் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், மிஷ்கின் ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு வேற லெவலில் அனிரூத் இசையமைத்து வருகிறார்.‌

இப்படத்தின் கடந்த மாதம் நடைபெற்ற போதிலும் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


 

Share this story