'தளபதி 67'-ல் இணையும் சூப்பர் ஸ்டார்... விஜய் படத்தின் மாஸான அப்டேட்

vijay with shahrukh khan

தளபதி 67-ல் பாலிவுட் சூப்பர்‌ இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'வாரிசு' படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி வருகிறது. 'விக்ரம்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கிற இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாக ஆரம்பித்துவிட்டது. 

vijay with shahrukh khan

ஏனென்றால் இந்த படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் தரமான இருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் நான்கு வில்லன்கள் மோதவுள்ளனர். அதன்படி பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோர் இந்த படத்தில் இணையவுள்ளனர். 

vijay with shahrukh khan

இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அட்லி இயக்கத்தில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Share this story