விஜய்யுடன் இணையும் மலையாள இளம் நடிகர்... ‘தளபதி 67’ குறித்து முக்கிய அப்டேட்

thalapathy 67

 விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தில் மலையாள இளம் நடிகர் ஒருவர் இணையவுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பணிகளை விரைவாக முடித்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. 

thalapathy 67

இந்த படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் மும்பை தாதாவாக விஜய் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் படத்தை தொடங்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

thalapathy 67

இந்நிலையில் இப்படத்தில் இளம் மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் இணையுள்ளராம். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இவர் ஏற்கனவே ஜோ அண்ட் ஜோ, ஒன், ஆப்ரேஷன் ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் படத்தில் தொடர்ந்து மலையாள நடிகர்கள் அதிகம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

Share this story