‘தளபதி 67’ டைட்டில் இதுதானா ?.. சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் ரசிகர்கள் !

thalapathy 67

‘தளபதி 67‘ படத்தின் தலைப்பு குறித்து சோஷியல் மீடியாவை ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜூடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திலிருந்து வெளியாகும் அறிவிப்புகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

thalapathy 67

‘விக்ரம்’ படத்தை விட பல மடங்கு மிரட்டலான இந்த படம் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. அதனால் தான் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் பல கோடிகளுக்கு வியாபாரமாகி உள்ளது. இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் இணைந்துள்ளது படம் வேற லெவலில் இருப்பதை உறுதி செய்துள்ளது. 

thalapathy 67

இந்த படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று ரத்தம் தெறிக்கும் வகையில் இருக்கும் விஜய்யின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என பல்வேறு தலைப்புகளை பதிவிட்டு இணையத்தையே ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர். 

thalapathy 67

இந்நிலையில் ‘தளபதி 67‘ தலைப்பு 7 எழுத்துக்களில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தலைப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் புதிய அப்டேட் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு குருதி அல்லது குருதிப்புனல் என்று இருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. 

 

Share this story