கேமராமேனாக மாறிய விஜய்... ‘தளபதி 67’ படக்குழுவினரின் அசத்தல் வீடியோ !

thalapathy 67

‘தளபதி 67’ படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக தனி விமானத்தில் சென்ற அசத்தல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

thalapathy 67

தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ திரைப்படம் மாஸாக உருவாகி வருகிறது. உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். செவன் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லிலித்குமார் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். 

thalapathy 67

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு வெளியானது. இதையடுத்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா, இயக்குனர் மிஷ்கின், அர்ஜூன், கெளதம் மேனன், நடன இயக்குனர் சாண்டி, நடிகை பிரியாஆனந்த், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ்   ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளனர். 

thalapathy 67

‘தளபதி67’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தொடங்கியுள்ளது. 50 நாட்கள் நடக்கும் இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு விஜய் மற்றும் படக்குழுவினர் காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் அருகே திரிஷா அமர்ந்திருக்கிறார். அதோடு மாஸாக விமானத்தில் ஏறும் விஜய், படக்குழுவினரை விமானத்தில் நடந்து சென்று சந்திக்கிறார். இறுதியாக ஒளிப்பதிவாளராக மாறி அனைவரையும் வீடியோ ஒன்றும் எடுக்கிறார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

thalapathy 67

thalapathy 67

thalapathy 67


 

Share this story