‘தளபதி’யை வெல்கம் செய்த ‘தல’ – ட்வீட் போட்டு அசத்தல்.

photo

தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகும் விஜய்யின் 67வது படத்திற்கு ‘லியோ’ என பெயரிட்டுள்ளனர்.  இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதாலும், இதற்கு முன் லோகேஷ் கமல் ஹாசனை வைத்து இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் இண்டஸ்ரி ஹிட்டானதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் தலைப்பு  அறிவிக்கப்பட்டதையொட்டி  விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

photo

தலைப்பு அறிவிப்பை தொடர்ந்து தற்போது லியோவுக்கு வாழ்த்துக் கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட் செய்துள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. லியோ பெயரை அறிவித்ததுமே பலருமே வாழ்த்து தெரிவித்து, ட்விட்டரில்  லியோ ஹஸ்டாக் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம், அக்டோபர் மாதம்19 ஆம் தேதி வெளியாகும் என புரொமோவில் அறிவிக்கப்பட்டிருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

photo

தோனி தலைமையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் சிஎஸ்கே அணியின் லோகோவில் சிங்கம் இருக்கிறது. அதன் பெயரான Leo-வை குறிப்பிட்டு தான் அப்படி ட்வீட் செய்துள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகம். இன்னொரு ட்வீட்டில் சிஎஸ்கேவின் லோகோவில் இருக்கும் பிளடி ஸ்வீட் என்ற கேப்ஷனை லியோ டீம் கூறியதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளதுமுன்னதாக பீஸ்ட் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை தோனி நேரில் சந்தித்தார், அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

photo

 

Share this story