அமெரிக்கா செல்லும் நடிகர் விஜய்... ‘தளபதி 68’ முக்கிய தகவல் !

thalapathy 68

‘தளபதி 68’ படத்திற்காக நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் அமெரிக்கா செல்லவுள்ளனர். 

‘லியோ‘ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் வயதான மற்றும் இளமையான என இரண்டு தோற்றத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார்.  அதனால் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது. 

விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஜோதிகா மற்றும் பிரியங்கா அருள் மோகன் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் மாதவன், பிரபுதேவா, ஜெய், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார். 

thalapathy 68

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தின் ப்ரீ பிரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட்டுக்கான நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய மூவரும் அமெரிக்கா செல்லவுள்ளனர். 

அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 3டி விஎப்எக்ஸ் ஸ்கேன் எனும் டெக்னாலஜி மூலம் லுக் டெஸ்ட்டை எடுக்கவுள்ளார். ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை கமலஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story