லியோவை மிஞ்சிய ‘தளபதி 68’... பெரிய தொகைக்கு விற்பனையானதால் ஆச்சர்யம் !

‘தளபதி 68’ படத்தின் ஆடியோ உரிமை பெரிய தொகைக்கு விற்பனையானது படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை முழுவதும் முடித்துள் நடிகர் விஜய், தற்போது சிறிய இடைவெளியில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை இறுதி செய்வதில் வெங்கட் பிரபு பிசியாக உள்ளார். இந்த படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதால் அடுத்த மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எப்போதும் வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி என்றாலே அது கலக்கல் கூட்டணிதான். அதில் விஜய்யும் இணைந்துள்ளார் என்றால் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில் இந்த மூவர் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் ஆடியோ உரிமை 24 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி சீரிஸ் நிறுவனம் நிறுவனம் இந்த உரிமையை அதிக விலைக்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ஆடியோ உரிமை 10 கோடிக்கும், ‘லியோ‘ 16 கோடிக்கும் வாங்கப்பட்ட நிலையில் இது உச்சபட்சமாக கருதப்படுகிறது.