‘தளபதி 68’ பட பூஜை புகைப்படங்கள் இதோ- ஷூட்டிங் அப்டேட்.

photo

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அவரது 68வது படத்திற்கான பட பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது. இது தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

photo

தளபதி விஜய் அவரது 68வது படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகையான மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளார். மேலும் படத்தில் மைக் மோகன் இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இம்மாதம் படப்பிடிப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பட பூஜை நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

photo

சென்னையில் நாளை படப்பிடிப்பு துவங்கி வரும் 16ஆம் தேதி வரை நடக்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து படக்குழு வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் நடிக்க உள்ள இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

photo

Share this story