சாங் ஷூட்டிங்கை நிறைவு செய்த ‘தளபதி68’ படக்குழு.

photo

தளபதி விஜய் நடிப்பில் தயாராகிவரும் அவரது 68வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கப்பட்டது. அதில் முதலாவதாக படத்தில் பாடல் படமாக்கப்பட்டது, இந்த படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் தற்போது அது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

தளபதி விஜய் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள படம் ‘லியோ’. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகியுள்ள இந்த படம் வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ந்து அவரது 68வது படத்திற்கான படப்பிடிப்பும் சமீபத்தில் துவங்கியது. அதில் முதலாவதாக பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்த பாடலில் நடிகர்கலான விஜய், பிரஷாந்த், பிரபுதேவா ஆகியோர் பங்கேற்றனர். படத்தின் ஓபனிங் சாங்காக இருக்கும் என எதிர்ப்பாக்கப்படும் இந்த பாடல் நட்பு பற்றி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்து அடுத்தகட்ட ஷெட்யூல் விரைவில் துவங்க உள்ளது.

Share this story