குடியரசு தினத்தில் வெளியாகும் "தளபதி 69" அப்டேட்...!

vijay 69

நடிகர் விஜய்யின் கடைசி படமான ’தளபதி 69’ இன் அதிகாரப்பூர்வ தலைப்பு குடியரசு தினத்தில் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.
 
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்தார், இந்நிலையில் அவரது கடைசி படமாக ’தளபதி 69’ இருக்கும் என அறிவித்திருந்தார். அதனால் 'தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை கேவின் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில் படம் குறித்த ஏதேனும் ஒரு அறிவிப்பு குடியரசு தினத்தன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ’தளபதி 69’ திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.vijay 69

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பை முடித்துவிட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் திட்டங்களை வைத்திருக்கிறார் விஜய் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டே தளபதி ரசிகர்கள் ’தளபதி 69’ படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் அப்போது படம் குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. அதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கண்டிப்பாக ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகும் என ஆவலாக காத்துகொண்டு இருந்த நிலையில்ன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 'தளபதி 69' படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாவதாக முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay 69
படம் வெளியாக இன்னும் பத்து மாதங்கள் இருப்பதால் படம் குறித்த செய்திகள், அப்டேட்டுகள் பொறுமையாக வெளியிடப்படும் என எதிர்பார்த்த நிலையில் இணையத்தில் வைரலாகும் இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’தளபதி 69’ தொடங்கப்பட்ட நாளிலிருந்து படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் விவாதமும் இணையத்தில் நிலவி வந்தது.

 
இந்நிலையில் ’தளபதி 69’ படத்திற்கு ’நாளைய தீர்ப்பு’ என தலைப்பு வைக்கப்படுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறையினர் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. ’நாளைய தீர்ப்பு’ என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம். எனவே அதனை நினைவுபடுத்தும் விதமாகவும் அவரது அரசியல் பயணத்தைக் குறிக்கும் விதமாகவும் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Share this story