"தளபதி விஜய் தான் என் க்ரஷ்..." - நடிகை கயாடு லோஹர்

தளபதி விஜய் தான் என் செலிபிரிட்டி க்ரஷ் என நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அதில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் பெரும் சென்சேஷன் ஆகிவிட்டார். சமூக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் கயாடு லோஹர் தான். ‘டிராகன்’ படம் வெளியான பிறகு அவரது ரீல்களும், புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
அசாம் மாநிலத்தை சேர்ந்த கயாடு லோஹர், 2021-ல் வெளியான ‘முகில்பெடெட்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகம் ஆனார். பிறகு 2022-ல் வெளியான ‘அல்லுரி’ என்ற தெலுங்கு படத்தில் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனினும் ‘டிராகன்’ படமே அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியுள்ளது.
#Watch | "என்னோட Celebrity Crush தளபதி விஜய் தான்" -டிராகன் பட நடிகை கயாடு லோஹர்#SunNews | #ACtorVijay | #KayaduLohar pic.twitter.com/GTFAFbwkJD
— Sun News (@sunnewstamil) March 6, 2025
இந்நிலையில், அவர் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, செலிபிரிட்டி க்ரஷ் யார் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, எந்த வித சந்தேகமும் வேண்டாம், கண்டிப்பாக தளபதி விஜய் தான் என செலிபிரிட்டி க்ரஷ் என கூறினார். மேலும், கல்லூரி மாணவிகளுடன் "அப்படிப் போடு.." பாடலுக்கு நடனமாடிய குத்தாட்டம் போட்டார்.
#Watch | "அப்படிப் போடு.." பாடலுக்கு நடனமாடிய நடிகை கயாடு லோஹர்.#SunNews | #KayaduLohar | #Salem pic.twitter.com/kXtmrx6JWq
— Sun News (@sunnewstamil) March 6, 2025