ரீரிலீஸ் ஆகும் தளபதி விஜய்யின் 'பகவதி'

vijay


நடிகர் விஜய் நடித்த  'பகவதி' திரைப்படம் ரீரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். 1992 இல் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆக்ஷன் ஹீரோவாக பரிணமித்த படம் பகவதி. 2002 இல் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ரீமா சென் ஆகியோர் நடிப்பில் வெளியான பகவதி படம் சூப்பர் ஹிட் ஆனது.
விஜய்க்கும் வடிவேலுவுக்கும் இடையிலான காமெடி காட்சிகளும், டீக்கடை உரிமையாளராக இருந்து கேங்ஸ்டராக விஜய் பரிணமிக்கும் ஆக்ஷன் காட்சிகளும் வெறித்தனமாக அமைந்திருக்கும். 

vijay
விஜய்யின் 22 ஆவது படமான இது என்றுமே அவரது கேரியரில் ஸ்பெஷலானதாக இருக்கும். பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி வரும் மார்ச் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) படம் ரீரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Share this story