தலைவா படத்திற்கு முதலில் "தளபதி" தான் டைட்டில்"..! இயக்குனர் கூறிய தகவல்

1

கோட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 69. இது அவருடைய கடைசி படம் என்றும் செல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் 69வது படம் தான் விஜய்யின் கடைசி படமாக அமையும் என்கின்றனர்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய், அமலா பால், சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சில அரசியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்த காரணத்தினால் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிரவிருந்த இப்படம் 10 நாட்களுக்கு பின் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளிவந்தது.

இந்த நிலையில், இப்படத்திற்கு முதன் முதலில் தலைவன் என்று தான் டைட்டில் வைத்துள்ளனர். ஆனால், அது சில காரணங்களால் அந்த டைட்டில் கிடைக்காமல் போய்விட்டது. பின் தலைவா படத்திற்கு 'தளபதி' என தலைப்பு வைத்துள்ளனர்.

ஏற்கனவே மணி ரத்னம் - ரஜினி கூட்டணியில் தளபதி எனும் படம் வெளிவந்துள்ளதால். அதை முறையாக ரைட்ஸ் வாங்கி இப்படத்தில் வைக்க வேண்டும் என முயற்சி செய்துள்ளனர்.

மணி ரத்னதிடமும் இதை குறித்து கேட்க வேண்டும் என இயக்குனர் விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி மணி ரத்தனத்தை நேரில் சந்தித்த போது மணி ரத்னம் 'விஜய் உன்னுடைய படத்திற்கு ஒரு தனி அடையாளம் இருக்கிறது, தளபதி படத்திற்கும் தனி அடையாளம் இருக்கிறது.

இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்' என கூறினாராம். பின் அந்த டைட்டில் வைக்காமல், இறுதியாக தான் தலைவா என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இதனை இயக்குனர் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். 


 

Share this story