‘தளபதி 67’ படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் – போஸ்டர் வெளியீடு.

photo

நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகி வரும் விஜயின் 67வது திரைப்படம், ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் அப்டேட்டை கேட்டு இயக்குநரை டார்சர் செய்து வந்த ரசிகர்களுக்கு போதும் போதும் என்ற அளவிற்கு கடந்த இரண்டு தினங்களாக அப்டேட் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

photo

இந்த நிலையில் சமீபத்தில்தான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியதாக அறிவித்து அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் தற்போது படத்தின் டிஜிட்டல் உரிமையை யார் கைப்பற்றியுள்ளார் என்ற தகவல் போஸ்டர் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. முன்னணி நிறுவனங்கள் இந்த உரிமையை வாங்க போட்டிப்போட்ட நிலையில் அதிக தொகைக்கு இந்த நிறுவனங்கள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

photo

‘தளபதி67’ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் 50 நாட்கள் நடக்க உள்ளது. அந்த படப்பிடிப்பில் விஜய் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தின் புரொமோவும் நாளை வெளியாகவுள்ளது.

photo

Share this story