‘தளபதி 67’ சூட்டிங் ஸ்பாட் அப்டேட்- ரசிகர்களை கட்டுப்படுத்த இந்த திடீர் முடிவு.

photo

‘வாரிசு’ படத்தை தொடர்ந்து தளபதி விஜய், லோகேஷுடன்  கூட்டணி அமைத்து  நடிக்க இருக்கும் ,அவரின் 67-வது படம் குறித்த   சூட்டிங் ஸ்பாட் அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.

photo

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து தளபதி 67ல் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைவதால், அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள 'தளபதி 67' படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் மற்றும் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  தளபதி 67 லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (LCU) பின்னணியில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

photo

ரசிகர்கள் மத்தியில் எதிபார்ப்பை அதிகரித்துள்ள  இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தை முதலில் மூணாரில் தான் படமாக்க முடிவு செய்தார்கலாம், ஆனால் ரசிகர்களின் கூட்டத்தை கட்டு படுத்த முடியாது என்பதால், மும்பை அருகே மூணார் மாதிரியாக இருக்கும் இடத்தை தேர்வு செய்து அங்கு படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகின்றனராம்.

photo

photo

சமீபத்தில் நடந்த பனையூர் ரசிகர் மன்ற கூட்டத்தில் ரசிகர்களின் கூட்டத்தில் கண்டு மிரண்டுதான் இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பர்கள் என சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.
 

Share this story