ஆவலாக எதிர்பார்த்த ‘தளபதி67’ படத்தின் டைட்டில் குறித்த அப்டேட்.

photo

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் தளபதி விஜய்யின் 67வது படமாக தயாராகி வருகிறது. பெயரிடப்படாத இந்த படத்தை ‘தளபதி67’ என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்து இரண்டு தினங்களாக படத்தின் அப்டேட் வந்து குவிந்த வன்ணம் உள்ளது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

photo

படத்தில் நடிகர்களான விஜய், திரிஷா, மன்சூர் அலிகான், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குநர்களான கவுதம் மேனன், மிஷ்கின், மலையாளஇளம்  நடிகர் மேத்யூ, நடிகை பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். இந்த நிலையில் ‘தளபதி67’ படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு காஷ்மீருக்கு பறந்துள்ளனர், மேலும் அங்கு 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

ரசிகர்களின் பேராதரவிற்கு மத்தியில் தயாராகும் இந்த படத்தின் தலைப்பு நாளை அறிவிக்கப்படும் என போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் என்ன தலைப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Share this story