‘தளபதி 67’-ல் இருந்து இயக்குனர் திடீர் விலகல்- வெளியன அதிர்ச்சி தகவல்.

photo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள திரைப்படம்  தளபதி 67. இந்த  படத்திலிருந்து  பிரபல இயக்குனர் திடீரென விலகி உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வாரிசு படத்தை முடித்து விட்டு நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் விஜய் தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

photo

படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. அதில் தற்போது உறுதியாகி உள்ளது, சஞ்சய் தத், மற்றும் விஷால் மட்டும் தான். இடையே பிருத்விராஜ், நிவின் பாலி ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. ஆனால் கால்ஷூட் பிரச்சனை காரணமாக அவர்கள் நடிக்க மறுத்துவிட்டனர்.

photo

அதேபோல் இந்த வில்லன் பட்டியலில் அடிபட்ட மற்றொரு பெயர் யரென்றால் அது  இயக்குனர் மிஷ்கின். அவரை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. அந்த அகையில் கிட்டத்தட்ட மிஷ்கின் நடிக்க போவதாகவே தகவல் வந்தது. ஆனால் அவர் தற்பொழுது தளபதி 67 படத்தில் அவர் நடிக்கவில்லை என  தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதாவது மிஷ்கின் இணையாததற்கு காரணமும் வெளியாகியுள்ளது.அதாவது அந்த படத்தில் நடிக்க அதிக நாட்கள் கால்ஷீட் கேட்டார்களாம். தான் இப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டால், தானது அடுத்த படமாக விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ள படத்தை திட்டமிட்டபடி தொடங்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு தளபதி 67-ல் இருந்து விலகி உள்ளாராம் மிஷ்கின். இந்த தகவல்  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

Share this story