“தளபதி 67” அப்டேட் எப்போது வெளிவரும் – லோகேஷ் கனகராஜ் கொடுத்த மாஸ் தகவல்.

photo

கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது  தளபதி விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்குகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் படம் குறித்த தகவல் வெளியீட்டிற்கு ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில் எப்போது அப்டேட் வெளியாகும் என்பது குறித்து லோக்கேஷ் தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவல் காட்டு தீ போல பரவி வருகிறது.

photo

அந்த வகையில் கோயமுத்தூரில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் இன்று சந்தீப் கிஷான் ஹீரோவாக நடித்து நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள ‘மைக்கேல்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  பேசுகையில் ‘தளபதி 67’ படத்தின் அப்டேட் குறித்தும் பேசியுள்ளார். அதாவது படத்தின் அப்டேட் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என கூறியுள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

photo

சமீபத்தில் தான் இந்த படத்தில் நடிகர் சியான் விக்ரம் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது.  இந்த நிலையில் படத்தின் அப்டேட் என்னவாக இருக்கும் என எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர்.

photo

Share this story