இதுதாங்க ‘தளபதி68’ பட தலைப்பு…..

photo

தளபதி விஜய் நடிப்பில் தயாராகிவரும் அவரது 68வது படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகும் நிலையில் கடந்த ஒரு வாரமாகவே படத்தின் தலைப்பு குறித்த செய்திதான், அந்த வகையில் இதுதாங்க படத்தோட தலைப்பு என்பதற்கு ஏற்ப தலைப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

photo

தளபதி 68 படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர். படத்தில் விஜய்யுடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, மோகன், சினேகா, பிரசாந்த், லைலா, பிரேம்ஜி, பிரபுதேவா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தொடர்ந்து அப்டேட்டுகளும் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் படத்தின் தலைப்பு பாஸ் மற்றும் பசில் என செய்திகள் வெளியானது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து அது மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் லேட்டஸ்ட் தகவலாக படத்திற்கு G.OAT அதாவது Greatest Of All Time என பெயரிட்டுள்ளனர். இந்த தகவல் வைரலான நிலையில் ரசிகர்கள் அதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Share this story