‘தளபதி 67’ குறித்த அப்டேட்... குழப்பத்தை ஏற்படுத்தும் பதிவு.. நீக்கிவிட்டேன்.. மன்னிப்பு கேட்ட மனோபாலா !

thalapthy 67

‘தளபதி 67’ குறித்து தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டு நடிகர் மனோபாலா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

‘வாரிசு’ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் லலித் குமார்  தயாரிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். 

thalapthy 67

இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி கடந்த மாதம் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து நடிகர் மனோபாலாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார். அதோடு லோகேஷ் கனகராஜ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன். அதே ஆற்றல் முழுவீச்சில் முதல் நாளே தூள் என்று கூறியிருந்தார். 

thalapthy 67

இந்த பதிவை பார்த்து உற்சாகமாக ரசிகர்கள், அந்த பதிவை ரீ ட்வீட் செய்ய தொடங்கினர். இந்நிலையில் திடீரென அந்த பதிவை நடிகர் மனோபாலா நீக்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த பதிவை நீக்கிவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனாலும் மனோபாலாவின் பதிவை ஸ்னாப்ஷாட் எடுத்து வைரலாக்கி வருகின்றனர். 

 

 

Share this story