விஜய்ரசிகர்கள்கொந்தளிப்பு- யாருபாத்தவேலஇது, தளபதி மேல இவ்வளவுவன்மமா?

பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக வருகிறது தளபதி விஜயின்’ வாரிசு- தி பாஸ் ரிட்டன்’ இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் திவிரமாக இறங்கியுள்ளனர்.அதன் படி சமீபத்தில் கூட படத்தின் இசைவெளியீட்டுவிழா கோலாகலமாக நடந்து சினிமாதுறையையே திரும்பி பார்க்க வைத்தது.
புரோமோஷனின் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் உட்பட, தமிழகத்தில் ஓடும் சில ரயில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ரயிலில் ஒட்டப்பட்டருந்த ஸ்டிக்கர்களை மர்ம நபர்கள் கிழித்தெறிந்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கடந்தவாரம் சென்னை - கொல்லம் செல்லும் அனந்தபுரி ரயிலில் வாரிசு படத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அனந்தபுரி ரயிலில் ஒட்டப்பட்ட வாரிசு படத்தின் ஸ்டிக்கர் பற்றிய வீடியோ செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர், அதில் மர்ம நபர்கள் ஸ்டிக்கரை கிழித்து வைத்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.