ஐபிஎல் 2023: தமன்னா – ராஷ்மிகா இணைந்து நடனம் - உற்சாகத்தில் ரசிகர்கள்.

photo

 போட்டி இன்று கோலாகலமாக அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், தொடங்க உள்ளது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்  அணியும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த நிலையில் விழாவில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளாக வலம் வரும் ராஷ்மிகா மற்றும் தமன்னா கலந்து கொண்டு உற்சாகமாக  நடனமாட உள்ளனர்.

photo

photo

ராஷ்மிகா மற்றும் தமன்னாவின் இந்த பங்களிப்பு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களிடையயே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா மற்றும் ஜியோ சினிமா இணைந்து நடத்தும், பிரம்மாண்டமான TATA IPL தொடக்க விழாவில் இன்று மாலை 6 மணிக்கு துவங்க உள்ளது. இந்த விழாவில் தமன்னா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடனமாட உள்ளதை தொடர்ந்து டைகர் ஷெராஃப், அரிஜித் சிங் மற்றும் கத்ரீனா கைஃப் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Share this story