மீடியாவை சந்திக்க மறுத்த தமன்னா -ஏன் தெரியுமா ?
நடிகை தமன்னா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் .இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏறத்தாழ 89 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமன்னா 2005 ஆம் ஆண்டு "சந்த் சா ரோஷன் செஹ்ரா" என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.
2005 ஆம் ஆண்டு வெளியான "கேடி" என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
2007 ஆம் ஆண்டு "ஹாப்பி டேஸ்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
"பாகுபலி" திரைப்படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்
நடிகை தமன்னா, கொழும்புவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் வருவதை அறிந்து மீடியாவினர் ஏர்போர்ட்டுக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால் வருகை முனையத்தில் இருந்து மீடியாவினரை எதிர்கொள்ள தமன்னா மறுத்துவிட்டார். மீடியாவை சேர்ந்தவர்களின் வரவை கவனித்த தமன்னா, அங்கிருந்து திரும்பிச் சென்று மீடியா முன் தோன்றுவதைத் தவிர்த்தார். பிறகு வேறொரு வழியாக அங்கிருந்து யாரையும் சந்திக்காமல் வெளியேறினார். அந்த நேரத்தில் அவர் துளியும் மேக்அப் இல்லாமல் இருந்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது மேனேஜரிடம் கூறி, அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் பேசியுள்ளார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் வந்து, தமன்னாவை வேறொரு வழியாக அங்கிருந்து அழைத்துச் சென்று கார் வரை சென்றுவிட்டு வந்தனர் என தமன்னாவுக்கு நெருங்கிய ஒருவர் கூறினார். ஆனால் ஆந்திரா மதுபான ஊழல் வழக்கில் தமன்னாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய தகவல் சமீபத்தில் வெளியானது. அது பற்றி மீடியாவினர் கேள்வி கேட்பார்கள் என்பதாலேயே அவர் ரகசியமாக வெளியேறியதாக கூறப்படுகிறது

