"சினிமா துறை சுவையான நினைவுகளை கொடுத்துள்ளது" -தமன்னா பேட்டி
1762047052000
நடிகை தமன்னா பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் .இவர் நடித்த பாகுபலி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ,இவர் சமீபத்தில் அளித்த பேட்டி பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘நான் நடிக்க ஆரம்பித்த காலத்திற்கும் இப்போதைக்கும் சினிமா நிறையவே மாறியிருக்கிறது. அது இன்னும் வளர்ச்சியடையும் என்று ஆழமாக நம்புகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் நடிகையாகவே இருக்க விரும்புகிறேன். நான் எங்கே சென்றாலும் என்னை மக்கள் அடையாளம் கண்டுபிடிப்பார்கள். ஆனால் நான் அப்படித்தான் செல்வேன். எனக்கு மக்களை பிடிக்கும். அவர்களோடு திரிவது பிடிக்கும். 30 வயதுவரை நடிப்பேன், பிறகு திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்வேன் என்று நினைத்தேன்.
ஆனால் 20களின் பிற்பகுதியில் இருந்தபோதும் நான் எனது சொந்த காலில் நிற்குமளவுக்கு வந்தேன். வயது பயம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. வயதானதை பற்றி சொல்லும்போது பலரும் ஏதோ நோய் வந்ததை போல் சொல்வார்கள். வயதாவது என்பது அற்புதமான ஒன்று. ஆனால் அதை நினைத்து மக்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள் என தெரியவில்லை. சினிமா துறை அதிர்ஷ்டவசமாக சுவையான நினைவுகளையும், பகுதிகளையும் எனக்கு கொடுத்திருக்கிறது’’ என்றார்