"நடிகைகளை கொண்டாடுங்கள், விமர்சிக்காதீர்கள்"புருஷன் படத்தில் நடிக்கும் தமன்னா பேட்டி
1785807058000
இந்தி படங்கள், வெப்சீரிஸ்களில் பிசியாக நடித்து வருகிறார் தமன்னா. தமிழில் இவர் நடிப்பில் அடுத்ததாக ‘புருஷன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இப்படத்தின் மீது தமன்னா அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை தமன்னா பேசும்போது, ‘‘ரசிகர்களை மகிழ்விப்பது தான் ஒரு நடிகையாக எனக்குள்ள பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். அப்படி ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகைகளை கொண்டாடுங்கள், விமர்சிக்காதீர்கள். போலியான தகவல்களையும், புகைப்படங்களையும் பரப்பி ஆனந்தம் கொள்ளாதீர்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள்’’ என கூறினார். நடிகை தமன்னாவின் இந்த கருத்து தற்போது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.

