தனது நகைக்கடைக்காக தமன்னா என்ன செஞ்சார் தெரியுமா?
1780018235000
தமன்னா ஃபைன் ஜுவல்லரி என்ற பெயரில் மும்பை, டெல்லி, புனே நகரங்களில் நகைக் கடைகளை நடத்தி வருகிறார் தமன்னா. ஆன்லைனிலும் இதற்கான பிசினஸில் ஈடுபட்டிருக்கிறார். சமீபத்தில் இந்த நகைக் கடையை விளம்பரப்படுத்த நடிகைகள் மிருணாள் தாக்கூர், ராசி கன்னா, ஹுமா குரேஷி, மீரா சோப்ரா உள்பட பலரை அழைத்து வந்தார். இப்போது புது பாணியில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் தனது கடையின் நகையை அணிந்து விளம்பரம் செய்திருக்கிறார்.
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், விளம்பரத்துக்காக இதுபோல் கவர்ச்சி காட்டுவது எந்த வகையில் நியாயம்? சுப காரியங்களுக்காக வாங்கும் நகைகளை விளம்பரப்படுத்த வேறு வழியே உங்களுக்கு தெரியவில்லையா? இவ்வளவு கீழே இறங்கி இதுபோல் நடந்துகொள்ள என்ன அவசியம் என சரமாரியாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால் தமன்னா அப்செட்டில் இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன