"இதுபோன்ற விஷயங்களை நான் கண்டுகொள்வது இல்லை"-தமன்னா ஆவேசம்
இந்தியில் ‘ஸ்திரீ 2’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடல் காட்சியில், தமன்னாவின் நடனம், தோற்றம் மற்றும் உடல் நிறத்தை குறிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் அன்னு கபூர் பேசினார். அப்போது, ‘ஆஹா... என்னவொரு துதியா பதன் (பால் போன்ற உடல்)’ என்று வர்ணித்து இருந்தார். பலத்த சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாச தொனியில் அவரது பேச்சு இருப்பதாக, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னாவிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ஒரு படைப்பாளியாக நம்முடைய மிக முக்கியமான வேலை, மற்றவர்கள் சொல்வதை கேட்பதுதான். ஆனால், எதை நம்முடன் வைத்துக்கொள்ள வேண்டும்? எதை வடிகட்டி தூக்கியெறிய வேண்டும் என்பதை புரிந்துகொள்வது அதைவிட முக்கியம்.
ஒரு பெண்ணாக இருந்தால், இதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற தேவையற்ற கருத்துகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினால், வாழ்க்கையில் நம்மால் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்ல முடியாது. எனவே, இதுபோன்ற விஷயங்களை நான் கண்டுகொள்வது இல்லை. நான் எனது வேலையில் மட்டுமே அதிக கவனம் செலு த்துகிறேன்’ என்றார்.

