தம்பி ராமையா மகனின் நடிப்பில் ‘தள்ளு வண்டி’.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

thanni vandi movie

தம்பி ராமையா மகன் ஹீரோவாக நடிக்கும் ‘தள்ளி வண்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி மற்றும் குணசித்திர நடிகராக இருப்பவர் தம்பி ராமையா. இவர் மகன் உமாபதி புதிய படம் ஒன்றில் காநாயகனாக அறிமுகமாகிறார். தள்ளு வண்டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாணிக்க வித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். 

thanni vandi movie

இப்படத்தில் ‘வில் அம்பு’ புகழ் சம்ஸ்கிருதி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மோசஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்ப்பில் ஜி சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.  

thanni vandi movie

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதையடுத்து ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story