தண்டட்டி பெருமையை பேசும் ‘தலையாட்டி பேசறப்ப’ பாடல்.. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

THANDATTI

‘தண்டட்டி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

கிராமங்களில் வயதான பாட்டிகள் அணியும் விருப்பமான அணிகலன்களில் ஒன்று தண்‘டட்டி’. இதை வைத்த தற்போது வித்தியாசமான கதைக்களத்தில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கியுள்ளார். சர்தார், ரன் பேபி ரன் ஆகிய வெற்றி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

thandatti

இப்படம் வரும் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி போலீஸ் கதைக்களத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவாளராகவும், கே.எஸ்.சுந்தரசாமி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். 

thandatti

காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இறந்த பாட்டியின் காதிலிருந்து காணாமல் போகிவிடும் தண்டட்டி திருடு போய்விடுகிறது. அதை கண்டுபிடிப்பது தான் இந்த படம். இந்நிலையில் இப்படத்தின் ப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. தண்டட்டியின் பெருமை பேசும் அந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story