தள்ளிப்போகும் ‘தங்கலான்’, ‘கங்குவா’ படங்கள்- எப்போது ரிலீஸ்?

photo

மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள சியான் விக்ரமின் தங்கலாம்’ மற்றும் சூர்யாவின் ‘கங்குவா’ ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.

photo

சியான் விக்ரம், பா. ரஞ்சித் கூட்டணியில் தயாராகியுள்ள படம் ‘தங்கலான்’. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் கேஜிஎப்-ஐ மைய்யமாக வைத்து தயாரான அந்த படத்தின் ரிலீஸ் வரும் ஜனவரி மாதம் 26 என அறிவிப்பு வெளியானது.  அதேப்போல சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா கூட்டணியில் மெகா பட்ஜெட் படமாக தயாராகும் படம் ‘கங்குவா’. வரலாற்று பின்னணியில் தயாராகும் அந்த படம் வரும் கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் வெளியாகும் என தகவல் வந்தது. இந்த நிலையில் தங்கலான் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கும், கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என தகவல் வந்துள்ளது.

Share this story