‘விக்ரம் வேற லெவல்’ - ரசிகரின் கேள்விக்கு நடிகை மாளவிகா பதில் !

thangalaan

‘தங்கலான்’ குறித்து சுவாரஸ்சியமான தகவல்களை நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். 

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது.  சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் நடித்து வருகிறார். இவர்களுடன் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

thangalaan

இந்நிலையில் ‘தங்கலான்’ குறித்து ரசிகர்களின் கேள்விக்கு சுவாரஸ்சியமாக நடிகை மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார். அதில் ‘தங்கலான்’ படத்தின் பயணத்தை நான் திரும்பி பார்க்கிறேன். விக்ரம் இல்லால் இந்த கடின பயணத்தை என்னால் கடந்திருக்க முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் விக்ரம் உதவியாக இருந்தார். அவரை சுற்றியிருப்பவர்களை மீது மிகுந்த அக்கறை கொண்டவர். 

சக நடிகர்களை அவர் ஊக்குவிப்பார். தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பார். அவரது நகைச்சுவை உணர்வை சொல்லவே தேவையில்லை. அவர் வேற லெவல். ‘தங்கலான்’ படம் அழகாக உருவாக வருகிறது. தனித்துவமான உலகை அது உருவாக்கும். இந்த மாதம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. விக்ரமுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு குணமடைந்த பிறகு விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று கூறினார். 

 

 

Share this story