‘தங்கலான்‘ படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப்... சவாலாக இருப்பதாக மாளவிகா மோகனன் ட்வீட் !

thangalaan

‘தங்கலான்‘ படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போடுவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். 

விக்ரமின் மிரட்டலான நடிப்பில் ‘தங்கலான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார்.  ப்ரீயட் படமாக உருவாகும் இந்த படம் உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.   சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. 

thangalaan

 ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வெளியாகவிருக்கிறது.  இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன்  கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

thangalaan

இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரமிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக விக்ரம் ஓய்வில் இருந்து வந்த விக்ரம் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இறுதிக்கட்டத்தில் எட்டியுள்ள இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

thangalaan

இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பில் இருக்கும் மாளவிகா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தங்கலான் படத்திற்காக 4 முதல் 5 மணி நேரம் மேக்கப் மற்றும் காஸ்டீமிற்காக தேவைப்படுகிறது. அவ்வளவு நேரம் அசையாமல் அமர்ந்திருப்பது சவாலாக இருக்கிறது. ஆம், உங்கள் கேமரா ரோலில் உள்ள பெரும்பாலான BTS புகைப்படங்கள் இப்படிதான் இருக்கும் என்று கூறியுள்ளார். 

Share this story