‘தங்கலான்’ ரிலீஸ் அப்டேட்!

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அரிவிப்பு இன்று மாலை வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தங்கலான்’. கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தின் மீதா எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது, அதற்கு காரணம் சியானின் மிரட்டலான தோற்றம்தாம். இது வரை பார்த்திராத வகையில் விக்ரமின் தோற்றம் உள்ளது.
#Thangalaan pic.twitter.com/ASicWt1kF3
— Vikram (@chiyaan) October 27, 2023
இந்த நிலையில் தற்போதைய அப்டேட்டாக படத்தின் ரிலீஸ் குறித்தப் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.. தொடர்ந்து படத்தின் டீசர் அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.