சர்வதேச தரத்தில் உருவாகும் பாடல்கள்.. ‘தங்கலான்’ குறித்து ஜிவி பிரகாஷின் சூப்பர் அப்டேட் !

gv prakash

 விக்ரமின் ‘தங்கலான்’ பாடல்கள் சர்வதேச தரத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது.  

இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

gv prakash

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்றது. முதலில் கடப்பாவில் நடைபெற்ற நிலையில் அடுத்து சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் கேஜிஎப்பில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகும் விதம் குறித்து முக்கிய தகவலை ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதன்படி இப்படத்திற்காக உற்சாகமான இசையமைத்து வருவதாகவும், இரண்டு பாடல்கள் பதிவு செய்து விட்டதாகவும், இதுவரை உருவாகியுள்ள பாடல்கள் சர்வதேச தரத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story