வெளியானது ‘தங்கலான்’ பட டீசர்!

photo

ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ‘தங்கலான்’ படத்தின் அப்டேட்டாக டீசர் வெளியாகியுள்ளது.

photo

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்  தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் லுக் போஸ்டர், டைட்டில் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்தது. அதற்கு காரணம் படத்தில் சியான் விக்ரமின் தோற்றம். இதுவரை நாம் பார்த்திராத வகையில் அடையாளம் தெரியாத விதமாக செம லுக்கில் உள்ளார் விக்ரம்.

தொடர்ந்து படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது படத்தின் டீசர் வெளியாகி குஷியாக்கியுள்ளது. அதிரடி சண்டை காட்சிகள், ரத்தம் தெரிக்கும் போர் காட்சிகள் என மிரட்டும் விதமாக அமைந்துள்ளது. இதனை பார்க்கும் போது திரையில் கண்டிப்பாக ட்ரீட் இருக்கும் என தெரிகிறது

 

 

Share this story