‘தங்கலான்’-ஆக மாறிய விக்ரம்.. இணையத்தில் வைரலாகும் மேக்கப் வீடியோ !

‘தங்கலான்’ படத்திற்காக நடிகர் விக்ரம் மேக்கப் போடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம். அந்த வகையில் மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது ‘தங்கலான்‘. ப்ரீயட் படமாக உருவாகி வரும் இந்த படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வெளியாகவிருக்கிறது.
இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பசுபதி, மலையாள நடிகை பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ப்ரீயட் படம் என்பதால் இந்த படத்திற்காக நடிகர், நடிகைகள் பல மணி நேரம் செலவு செய்து மேக்கப் போட்டுக் கொண்டு படத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ‘தங்கலான்‘ படத்திற்காக நடிகர் விக்ரம் மேக்கப் போடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வியக்க வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
Something exceptional in the making!
— Studio Green (@StudioGreen2) June 28, 2023
Amidst intense and tireless efforts, #Thangalaan shoot is in full swing 🌀
Brace yourself!⚡@Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @DanCaltagirone @thehari___… pic.twitter.com/GG00yYuERB
Something exceptional in the making!
— Studio Green (@StudioGreen2) June 28, 2023
Amidst intense and tireless efforts, #Thangalaan shoot is in full swing 🌀
Brace yourself!⚡@Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @DanCaltagirone @thehari___… pic.twitter.com/GG00yYuERB