வசூலை வாரிக்குவிக்கும் தங்கலான்.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா..?

Thangalan

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தங்கலான். சீயான் விக்ரம் - பா. ரஞ்சித் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கேஜிஎப் பின்னணியில் நடந்த இந்த கதை உண்மை சம்பவத்தை மையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் இப்படத்திற்காக வெற்றி விழா கொண்டாடப்பட்ட நிலையில், தங்கலான் 2 குறித்து தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக தங்கலான் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Thangalan

இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 63.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. 

Share this story