உலகளவில் வசூலில் ரூ. 50 கோடியை கடந்த தங்கலான்

Thangalan

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக பல காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தங்கலான் திரைப்படம் சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று உலகளவில் வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்கலான் ஆகஸ்ட் 15 ரிலீசானது.உலகளவில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், தங்கலான் படம் முதல் நாளில் மட்டும் ரூ.26.44 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் உலகம் முழுக்க 53 கோடியே 64 லட்சம் ரூபாய் வசூலித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தங்கலான் படத்தின் சர்வதேச வசூல் தொடர்பாக படக்குழு சார்பில் விசேஷ போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது


.

Share this story